Saturday, February 12, 2011

தாயே நீயே ஒரு பூங்கவிதை...

தாயே,
கோடிக்கணக்கான என்
உறவுகளையெல்லாம்
தோற்கடித்து,கருவறையில்
உயிராய், உணர்வாய் உனது
அன்பில் மலர்ந்தேன்....

பத்து திங்களும் பல
சுமைகளை நீ கடந்தது,
நான் இந்த புவியில்
உனது சேயாய் பிறந்தேன்....

ரோஜாவின் இதழ்களிலும்
மெல்லிய உனது கரங்களில்
அன்போடு நித்தம் தவழ்ந்தேன்....

நீ கண்ணுறங்காமல் தவமாய்
தவமிருந்து எனைப் போற்றி
வளர்த்தாய், நானும் வளர்ந்தேன்....

தாயே நீயே ஒரு பூங்கவிதை...

1 comment:

  1. என்றும் மாறாத பூக்களின் வாசம்... தாயின் பாசம்...

    பூங்கவிதையும், உங்கள் கவிதையும் அருமை தான்


    வாழ்த்துகள்.... மேலும் இங்கே தொடர்ந்து பலபடப்புகள் படைத்திட....

    ReplyDelete